இமாச்சல பிரதேச மாநிலத்தின் புதிய முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நந்டவுன் தொகுதி எம்எல்ஏவும், தேர்தல் பிரசார குழு தலைவருமான சுக்விந்தர் சிங் சுகுவும், துணை முதலமைச்சராக முகேஷ் அக்னி கோத்திரியும் தேர்வாகி உள்ளனர்.
அவர்கள் இருவரும் நாளை காலை 11 மணிக்கு பதவியேற்பார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் சட்டீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் அறிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த இமாச்சல் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளில் வெற்றிபெற்று பாஜகவிடமிருந்து ஆட்சியை கைப்பற்றியது.