பிரேசில் நாட்டில் அக்டோபர் மாதம் நடைபெற்று முடிந்த அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஜேர் போல்சனரோவை இடதுசாரி அமைப்பைச் சேர்ந்த லூலா டி சில்வா தோற்கடித்த போதிலும் லூலாவின் வெற்றியை போல்சனரோ ஏற்க மறுப்பதால் அங்கு அரசியல் குழப்பம் நிலவி வருகிறது.
போல்சனரோ ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் சுமார் 40 நாட்களுக்குப் பிறகு போல்சனரா தனது ஆதரவாளர்களிடம் உரையாற்றும் வீடியோ வெளியாகி உள்ளது.
அதில், ஆயுதப்படைகள் நம் மக்களுக்கு விசுவாசமாகவும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு மதிப்பளிக்கவும் கடமைப்பட்டுள்ளனர் என்பதால் நாட்டில் ராணுவப்புரட்சி ஏற்பட வேண்டும் என்றும் லூலாவை பதவியேற்க விடக் கூடாது என்றும் போல்சனரோ தெரிவித்துள்ளார்.