ஆஸ்திரேலியாவில் கடல் வாழ் உயிரினமான ப்ளேசியோசரின் 100 மில்லியன் ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குயின்ஸ்லாந்தின் மெக்கின்லி பாலைவனத்தில் இதன் எலும்புக்கூட்டை கண்டுபிடித்ததாக ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த உயிரினம் 145 முதல் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கிரெட்டேசியஸ் காலத்தின் தொடக்கத்தில் டைனோசர்களுடன் இணைந்து வாழ்ந்ததாக கூறப்படுகிறது.