காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாளையொட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், சோனியா காந்தி நீண்ட காலம் உடல் நலத்துடன் வாழ பிரார்த்தனைகள் செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் சோனியாகாந்தியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்ததாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.