மாண்டஸ் புயல் காரணமாக, சென்னையில் மெரினா, பெசன்ட் நகர் மற்றும் காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் கடற்கரைக்கு அருகில் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதே போல, மாமல்லபுரம் கடற்பகுதியில் கடல் அலைகள் வழக்கத்தை விட 4 முதல் 6 அடி உயரம் வரை சீற்றமாக எழுகின்றன. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் மயிலாடுதுறை தரங்கம்பாடி பகுதிகளிலும் கடல் சீற்றத்துடன் காணப்படும் நிலையில், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மாநில மற்றும் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.