ஈராக்கில் பாதுகாப்பு படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
தெற்கு நகரமான நசிரியாவில் அரசுக்கெதிரான போராட்டத்தின் போது பாதுகாப்புப் படையினரை நோக்கி போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியதில் 11 பேர் காயமடைந்தனர். தொடர்ந்து, கலவரமாக மாறி தீவிரமடைந்ததால், துப்பாக்கிச்சூடு நடத்தி பாதுகாப்புப் படையினர் விரட்டியடித்தனர்.
இதில், 2 பேர் உயிரிழந்த நிலையில், 16 பேர் காயமடைந்தனர். ஈராக் பிரதமராக முகமது அல்-சூடானி நியமிக்கப்பட்டதை எதிர்த்து அக்டோபரில் இருந்து அங்கு போராட்டம் தொடர்கிறது.