மத்தியப் பிரதேச மாநிலம் பெட்டுல் பகுதியில் ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள 8 வயதுச் சிறுவனை மீட்க இரண்டாவது நாளாக இரவும் பகலும் இடைவிடாத முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் சிவராஜ் சவுஹான் நேரடி பார்வையில் இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
சிறுவன் சுவாசிக்க ஆக்சிஜன் போன்றவை செலுத்தப்பட்டு அருகில் 25 அடிக்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
200 அடி ஆழமான ஆழ்துளை கிணற்றில் சிறுவன் 40 அடி ஆழத்தில் சிக்கியிருப்பதாக மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்