வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக டெல்லி விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட 15 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கொண்ட 27 ஆயிரம் விவோ (Vivo) ஸ்மார்ட் போன்களை, மத்திய நிதி அமைச்சகத்தின் வருவாய் புலனாய்வு பிரிவினர் முடக்கி வைத்துள்ளனர்.
இந்தியாவுடனான மோதலுக்கு பிறகு, சீன நிறுவனங்கள் மீதான கண்காணிப்பை, இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், சீனாவை பூர்வீகமாகக்கொண்ட விவோ நிறுவனம், இந்தியாவில் உற்பத்திசெய்து ஏற்றுமதி செய்யும் செல்போனின் மாடல் மற்றும் விலையை தவறாக குறிப்பிட்டுள்ளதாகக்கூறி, மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அரசின் இந்த நடவடிக்கை, இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிக்காது என்று, இந்திய செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சங்கத்தினர் விமர்சித்துள்ளனர்.