பணம் மதிப்பிழப்பு, விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல என்று உச்சநீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
பண மதிப்பிழப்புக்கு எதிரான மனுக்கள் குறித்து உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி வருகிறது.
நேற்றைய விசாரணையின்போது ரிசர்வ் வங்கி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குப்தா, பணமதிப்பிழப்பு நடவடிக்கை தேசத்தைக் கட்டமைக்கும் செயல்பாடு என்றும், மத்திய அரசின் பொருளாதார கொள்கை ரீதியான முடிவில் நீதிமன்றம் தலையிட வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.
இதற்கு பதிலளித்த நீதிபதிகள் அரசின் முடிவு குறித்து விசாரணை நடத்தவில்லை என்றும், அதனை நடைமுறைப்படுத்திய விதம் குறித்து மட்டுமே விசாரிப்பதாகவும் தெளிவுபடுத்தினர்.