கத்தாரில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணி தென்கொரியாவை வீழ்ந்து காலிறுத்திக்கு முன்னேறியதால் ரியோ டி ஜெனிரோவில் உள்ள புகழ்பெற்ற சின்னமான கிறிஸ்ட் தி ரிடீமர் சிலை பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் ஒளியூட்டப்பட்டது.
தென் கொரியாவுக்கு எதிரான போட்டியின் முதல் பாதியில் கோல் அடிக்காத நிலையில், இரண்டாவது பாதியில் பிரேசில் அணி 4 கோல்கள் அடித்து, இறுதியில் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
வருகின்றன 9-ம் தேதி நடைபெறும் காலிறுதிப் போட்டியில் பிரேசில் அணி குரோஷியாவை எதிர்கொள்கிறது.