ரஷ்யாவுடனான போரில் இழந்த நகரங்களை மீட்க உக்ரைன் படைகள் கடுமையாக சண்டையிட்டு வரும் நிலையில் பொதுமக்கள் அமைதிகாக்குமாறு அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல்களால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இதர சேவைகளும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவற்றை சரிசெய்ய அதிகாரிகள் முழுவீச்சில் பணியாற்றி வருகின்றனர்.
மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பல லட்சம் பேர் கடும் குளிரில் வெப்ப நிலையை பெறமுடியாமல் தவிக்கின்றனர்.இந்தப் பனிக்காலத்தை மிகுந்த ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.