தென்கொரிய எல்லைப்பகுதியில் வடகொரியா 130 முறை பீரங்கி குண்டுகளை வீசியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா ராணுவ பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகொரியா தொடர் ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக வடகொரியாவுக்கு வாய்மொழி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், ஒப்பந்தத்தை கடைபிடிக்குமாறு வலியுறுத்தியதாகவும் தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், கடந்த 2018-ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கிடையே மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயலென்று தென்கொரிய கூட்டுப்படைத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.