காஷ்மீரின் அடையாளங்களில் ஒன்றாக கருதப்படும் தால் ஏரிக்கான 20 நீர்வரத்து வாய்க்கால்கள் சீரமைக்கப்பட்டதோடு, படகுகளால் உருவாகும் கழிவுகளை கையாள்வதற்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாசு மற்றும் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ள தால் ஏரியை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட காஷ்மீர் அரசு, ஏரி பாதுகாப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் மூலம், (LCMA) 20 நீர்வரத்து வாய்க்கால்களின் ஆக்கிரமிப்பை அகற்றியதோடு, கழிவுகளை சேகரித்து மற்றொரு இடத்தில் சுத்திகரிப்பு செய்யவும் நடவடிக்கை எடுத்தது.
இதனால், தண்ணீரின் தரம் மேம்பட்டு நீர்வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கும், சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கவும் உதவும் என்று அரசு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.