சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தலுக்காக ஒருவரை சுகாதாரத்துறையினர் அவரது வீட்டிற்குள் புகுந்து வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்லும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
சீனாவில், தினசரி கொரோனா பாதிப்பு சுமார் 32 ஆயிரம் என்ற அளவில் இருப்பதால் ஜீரோ நிலைக்கு கொண்டு வருவதற்காக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு நகரங்களில் மக்கள் நடத்திய போராட்டங்களால் கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக சீனா அறிவித்த போதிலும் அங்கு கடுமையான கட்டுப்பாடுகளே தொடர்வதாக பல்வேறு தரப்பினரும் சமூகவலைத்தளங்களில் கமென்ட் செய்து வருகின்றனர்.