ரஷ்யாவின் கச்சா எண்ணெய்க்கு ஜி7 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியங்கள் விலை நிர்ணயம் செய்ததை ஏற்க முடியாது என்று ரஷ்யா அறிவித்துள்ளது.
உக்ரைனுடன் போரில் ஈடுபட்டு வரும் ரஷ்யாவின் வருமானத்தை கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா, ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளைக் கொண்ட ஜி7 நாடுகள் தற்போது ஒரு பேரல் 67 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப்பட்டு வரும் கச்சா எண்ணெய்யை 60 டாலராக விலை குறைத்துள்ளது.
இந்த நடவடிக்கைக்கு ஐரோப்பிய யூனியன் நாடுகளும், ஆஸ்திரேலியாவும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் இந்த விலை நிர்ணயத்தை ரஷ்யா ஏற்க மறுத்துள்ளதோடு, இதற்கு எவ்வாறு பதிலளிப்பது என்று ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், கச்சா எண்ணெய்யை கடல் வழியாக ஏற்றுமதி செய்வது, அதற்கு காப்பீடு செய்வதற்கும் ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள தடையும் நாளை முதல் அமலுக்கு வருகிறது.