கடந்த 1-ம் தேதி முதல் ஜி-20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் முதல் ஜி-20 ஷெர்பா கூட்டம் நடைபெறுகிறது.
இன்று முதல் 7-ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் கூட்டத்திற்கு இந்திய ஷெர்பா, அமிதாப் காந்த் தலைமை தாங்குகிறார்.
இந்தக் கூட்டத்தில் 40 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், கலாச்சார விளக்கக் காட்சிகள் நடைபெறுகிறது.
உதய்பூர் நகர அரண்மனையான மனக் சவுக்கில் இந்தியாவின் பல்வேறு கலை வடிவங்கள் பற்றிய விளக்கக்காட்சியும் நடைபெறுகிறது.