நாட்டின் வறுமையை ஒழிக்க கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
கிராமப்புற வேலைவாய்ப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களையடுத்து நலத்திட்டங்களை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு அண்மையில் ஒரு குழுவை நியமித்துள்ளது.
இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை முறையாகப் பயன்படுத்துவது குறித்தும் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் வறுமை அதிகளவில் உள்ள மத்தியப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம், சட்டிஸ்கர், ஒடிசா ஆகிய 6 மாநிலங்கள் இதுவரை ஒதுக்கப்பட்ட 45 ஆயிரம் கோடி ரூபாய் நிதியில் சுமார் 18 ஆயிரம் கோடி ரூபாயை மட்டுமே பயன்படுத்தியுள்ளன.