ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு விலை உச்சவரம்பை, ஜி 7 நாடுகள் நிர்ணயம் செய்த நிலையில், இதுபோன்ற நடவடிக்கைகள் நிச்சயமற்ற தன்மையை அதிகரிக்கும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
ஜி 7 அமைப்பு மற்றும் மேற்கத்திய நாடுகள், ரஷ்யாவின் வருவாயை கட்டுப்படுத்தவும், உக்ரைன் போருக்கு நிதியளிப்பதை தடுக்கவும், அந்நாட்டின் கச்சா எண்ணெய் விலையை பீப்பாய்க்கு 60 டாலர் என நிர்ணயம் செய்தன.
இந்த நடவடிக்கைகளால், மூலப்பொருட்களுக்கான செலவை அதிகரிக்கும் எனவும், ரஷ்ய எண்ணெய்க்கான தேவையை கட்டுப்படுத்த முடியாது எனவும் ரஷ்யா குறிப்பிட்டது.
மேலும், விலை உச்ச வரம்பை விதிக்கும் நாடுகளுக்கு கச்சா எண்ணெயை ரஷ்யா வழங்காது என தெரிவித்தது.