சென்னை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மறைந்த கால்பந்து விளையாட்டு வீராங்கனை பிரியா நினைவு மகளிர் கால்பந்து போட்டிகளை அமைச்சர்கள் சேகர்பாபு, மெய்யநாதன் ஆகியோர் பிரியாவின் தாயாரின் கையில் கால்பந்தை கொடுத்து துவக்கி வைக்குமாறு கூறினர்.
நேரு உள்விளையாட்டரங்கில் இன்றும், நாளையும் நடைபெறும் இந்த போட்டிகளில் 5 மாநிலங்களை சேர்ந்த 16 அணிகள் பங்கேற்கின்றன.
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மெய்யநாதன், ஆசிய கடற்கரை விளையாட்டு போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவது தொடர்பாக மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.