உக்ரைனின் கெர்சன் நகரில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததோடு, 7 பேர் படுகாயமடைந்தனர்.
பல மாதங்களாக கெர்சனை ஆக்கிரமித்திருந்த ரஷ்ய படைகள், கடந்த மாதம் அங்கிருந்து வெளியேறியதைத்தொடர்ந்து, டினிப்ரோ ஆற்றின் எதிர்பக்கத்தில் இருந்து கெர்சன் மீது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன.
ஒரே நாளில் 42 முறை குண்டுகளை வீசி ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியதாகவும், இதனால் கெர்சனில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.