ஜனநாயகம் பற்றி இந்தியாவுக்கு யாரும் சொல்லித்தர வேண்டிய அவசியமில்லை என, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் குழுத்தலைவராக பொறுப்பேற்ற இந்திய பிரதிநிதி ருச்சிரா காம்போஜ் தெரிவித்துள்ளார்.
15 நாடுகள் கொண்ட ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் சுழற்சி முறையிலான தலைமை பொறுப்பை ஏற்றுள்ள இந்தியா, பயங்கரவாதம் மற்றும் சீர்திருத்தப்பட்ட பன்முகத்தன்மை குறித்து கையெழுத்து இயக்கங்களை நடத்தவுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் ஜனநாயகம் மற்றும் பத்திரிகை சுதந்திரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இந்திய ஜனநாயகத்தின் வேர்கள் 2,500 ஆண்டுகளுக்கு முந்தையது எனவும், ஜனநாயகத்தின் 4 தூண்களும் வலிமையாக உள்ளதாகவும் தெரிவித்தார்.