ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் 12-ம் ஆண்டு சர்வதேச மணல் சிற்ப கலை விழா இந்தியா சார்பில் தொடங்கி நடைப்பெற்று வருகிறது.
இதில் பங்கேற்ற இந்திய கலைஞர் சுதர்சன் பட்நாயக், இந்த வருடம் ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளதை குறிக்கும் விதமாக, ஜி20 லோகோவை சிற்பமாக வடித்தார்.
சிங்கப்பூர், ரஷ்யா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர்கள் இவ்விழாவில் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.