ஆப்பிள் நிறுவனத்துடனான தவறான புரிதல் தீர்க்கப்பட்டு விட்டதாக, ட்விட்டர் தலைமை நிர்வாக இயக்குநர் எலான்மஸ்க் தெரிவித்துள்ளார்.
ஆப்பிள் நிறுவனம் தனது ஆப் ஸ்டோரிலிருந்து ட்விட்டரை நீக்குவதாக மிரட்டுகிறது என்று எலான்மஸ்க் செய்திருந்த ட்வீட் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த ட்வீட் குறித்து ஆப்பிள் நிறுவனம் எந்த விளக்கமும் அளிக்காத நிலையில், ஆப்பிளின் தலைமை நிர்வாகி டிம்குக்கை, எலான் மஸ்க் சந்தித்து இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
சந்தாக்கள் போன்ற பரிவர்த்தனைகளில் ஆப் ஸ்டோர்கள் கமிஷன் பெறும் நிலையில், ட்விட்டரும் அவ்வாறு கமிஷன் செலுத்த வேண்டியிருக்கும் என எலான் மஸ்க் கருதியதால், இவ்வாறு நடந்துக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.