சென்னையில் செஸ் ஒலிம்பியாட் விழாவிற்காக, பிரதமர் வருகையின்போது பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டதாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்வைத்த குற்றச்சாட்டிற்கு, திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பிரதமரின் வருகைக்கு முன்னதாக, அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மத்திய பாதுகாப்பு அதிகாரிகளே மேற்கொள்வார்கள் என்றும், அவர்களை மீறி, எந்த தவறும் நடந்துவிட முடியாது என்றும் தெரிவித்தார்.