இந்தியா விரைவான வளர்ச்சியை எட்ட முடியாமல் உள்ளதற்கு அதிகப்படியான மக்கள் தொகையும் ஒரு காரணம் என்று மத்திய கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் கூறினார்.
பீகாரில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் சீனாவில் ஒரு நிமிடத்திற்கு 10 குழந்தைகள் பிறக்கும் நிலையில் இந்தியாவில் ஒரு நிமிடத்திற்கு 31 குழந்தைகள் பிறக்கின்றன. இதனால், விரைவான வளர்ச்சியை இந்தியாவால் மேற்கொள்ள முடியவில்லை என்று கூறினார்.
இந்தியாவின் மக்கள் தொகை தற்போது 141 கோடியை தாண்டியுள்ள நிலையில், சீனாவின் மக்கள் தொகை 145 கோடியாக உள்ளது. வரும் 2030 ஆம் ஆண்டில் உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கும் என்று ஐ.நாவின் உலக மக்கள்தொகை வாய்ப்புகள் என்ற அமைப்பு தகவல்கள் வெளியிட்டுள்ளது.