பீகார் மாநிலத்தில் வாக்கு வங்கி அரசியலுக்காக அங்கு வேகமாக நடைபெற்று வரும் மதமாற்றத்தை நிதீஷ்குமார் அரசு கண்டுக்கொள்வதில்லை என்று மத்திய கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கிரிராஜ்சிங், நேபாளம் மற்றும் மேற்கு வங்க எல்லையான சீமாஞ்சலுக்குள் நுழைந்தால் வங்கதேசத்துக்குள் நுழைந்துவிட்டது போன்ற உணர்வை ஏற்படுத்தும் அளவிற்கு மதமாற்றம் நடந்துள்ளது என்றார்.
வலுவான மதமாற்ற எதிர்ப்புச் சட்டத்தின் மூலமாகவே இதனை தடுக்க முடியும் என்று அமைச்சர் கூறினார்.