சைபீரியாவில், உறைந்திருந்த ஏரியின் பனிப்பாறைகளுக்கு கீழே இருந்த 48 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான "ஜாம்பி வைரஸ்"-ஐ ஐரோப்பாவை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பருவநிலை மாற்றம் காரணமாக பல ஆயிரம் ஆண்டுகளாக உறைந்திருந்த இந்த ஏரி உருகியுள்ள நிலையில், இதில் 13 புதிய வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இருவேறு இடத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வு செய்ததில், வைரஸ்கள் இன்னும் கூட மனிதர்களைத் தாக்கும் குணத்தைக் கொண்டிருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.