தென்கொரியாவில் அரசுக்கு எதிராக வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லாரி ஓட்டுநர் தொழிற்சங்கத்தினர், மொட்டை அடித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
ஊதிய உயர்வு, பணிச்சூழல் மேம்பாடு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, தென்கொரியா முழுவதும் லாரி ஓட்டுநர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்தப் போராட்டத்தால், தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
2 ஆயிரத்து 500 சிமெண்ட் லாரி ஓட்டுநர்களை இன்று முதல் பணிக்கு திரும்புமாறு அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், சீயோலின் உய்வாங் (Uiwang) நகரத்தில், வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்ட CTSU தொழிற்சங்கத்தினர், மொட்டை அடித்துக்கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.