நாடு முழுவதும் டிசம்பர் 1ஆம் தேதியன்று சில்லறை பணவரிவர்த்தனைக்கான டிஜிட்டல் ரூபாய் அறிமுகப்படுத்தப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
சோதனை அடிப்படையில் அறிமுகமாகும் அந்த டிஜிட்டல் நாணயம், தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்களின் மதிப்பிலேயே இருக்கும் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக எஸ்.பி.ஐ., ஐ.சி.ஐ.சி.ஐ., எஸ் வங்கி, ஐடிஎஃப்சி வங்கிகள் மூலம் மும்பை, டெல்லி, பெங்களூரு, புவனேஸ்வரத்தில் டிஜிட்டல் ரூபாய் விநியோகிக்கப்படும் என ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.
வங்கிகள் வழங்கும் டிஜிட்டல் வாலட் மூலம் பயனர்கள் டிஜிட்டல் ரூபாயை பரிவர்த்தனை செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.