ஆப்பிள் நிறுவனம் டிவிட்டருக்கு மிரட்டல் விடுவதாக, அதன் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள எலான் மஸ்க், ஆப்பிள் நிறுவனம் தனது ஆப் ஸ்டோரில் இருந்து டிவிட்டரை நிறுத்தி வைப்பதாக மிரட்டல் விடுவதாகவும், ஆனால் அதனை ஏன் தங்களிடம் அந்நிறுவனம் தெரிவிக்கவில்லை என வினவியுள்ளார்.
மேலும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து வாங்கும் ஒவ்வொரு பர்சேஸ்களுக்கும், அந்த நிறுவனம் மறைமுகமாக 30 சதவித வரி விதிப்பதாகவும் எலான் மஸ்க் குறை கூறியுள்ளார்.