சீனாவில், அரசுக்கெதிரான போராட்டங்கள் தொடர்பாக அந்நாட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் காணொலிகளை தணிக்கை துறை அதிகாரிகள் அகற்றிவருகின்றனர்.
மாதக்கணக்கில் நீடிக்கும் ஊரடங்கால் மக்கள் கடும் அதிருப்தியிலிருந்த நிலையில், உருஊச்சி நகரில், கொரோனா நோயாளிகள் இருந்ததால் மூடப்பட்டிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் நேர்ந்த தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்தது மேலும் கொதிப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராக முக்கிய நகரங்கள், பல்கலைக்கழகங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
கடுமையான தண்டனைகளால் அரசுக்கு எதிராக மிகவும் அரிதாக போராட்டங்கள் நடக்கும் சீனாவில், தற்போது அவற்றை ஒடுக்கும் முயற்சியாக போராட்டங்களில் ஈடுபடுவோரும், பத்திரிக்கையாளர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.