டெல்லியில் காற்றின் தரம் கடந்த சில நாட்களாக முன்னேற்றம் அடைந்து வந்த நிலையில் இன்று மீண்டும் மோசமடைந்து உள்ளது.
டெல்லியில் கடந்த சில வாரங்களாக காற்றின் தரம் கடுமையான பாதிப்பை சந்தித்து வந்த நிலையில் அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் படிப்படியாக காற்றின் தரம் உயர்ந்து வந்தது.
இந்நிலையில், இன்று மிகவும் மோசமானது என்பதை குறிக்கும் அளவான 317 என்ற அளவினை காற்றின் தரம் எட்டியது.
மேலும், குளிர்காலம் தொடங்குவதை முன்னிட்டு காலை நேரத்தில் புகை மூட்டம் நிலவியதாக தகவல் வெளியானது.