மத்திய ஆப்ரிக்க நாடான கேமரூனில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர்.
தலைநகர் யவுண்டேவில் 20 மீட்டர் உயரமுள்ள அணைகட்டுப் பகுதியின் அடிவாரத்தில் உள்ள கால்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்ற இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அப்போது, நிலச்சரிவு ஏற்பட்டு மண்சுவர் அவர்கள் மேல் இடிந்து விழுந்தது. மீட்பு படையினரின் உதவியுடன் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மண்ணில் புதையுண்டவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார்.