சீனாவில் அமலில் உள்ள கடுமையான கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை கண்டித்து அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராக முக்கிய நகரங்கள், பல்கலைக்கழகங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
கொரோனா பாதிப்பை பூஜ்ஜியமாக்கும் நோக்கில் மாதக்கணக்கில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, நாட்கணக்கில் தனிமைபடுத்துதல் ஆகியவற்றால் மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர்.
இந்நிலையில், உருஊச்சி நகரில், கொரோனா நோயாளிகள் இருந்ததால் ஒருசில வாயில் கதவுகள் மட்டுமே திறந்துவைக்கப்பட்டிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், 10 பேர் வெளியேற முடியாமல் உள்ளேயே சிக்கி உயிரிழந்த சம்பவம் அரசுக்கு எதிரான கொந்தளிப்பை மேலும் அதிகரித்து போராட்டங்களுக்கு வழிவகுத்தது.
ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியால் கடுமையான தணிக்கை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பலர் காலி பதாகைகளுடன் போராட்டத்தில் பங்கேற்றனர்.