அடுத்தாண்டு குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தல் ஃபத்தா அல் சிசி பங்கேற்பார் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்ட அறிவிப்பில், பழங்கால நாகரீகம், கலாசாரம் மற்றும் இரு நாட்டு மக்களுக்கு இடையேயான உறவின் அடிப்படையில் இந்தியா - எகிப்து நாடுகள் நல்லுறைவை பேணி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கு இடையிலான தூதரக உறவு ஏற்படுத்தப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் ஒருவர் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.