உலகின் சக்திவாய்ந்த அணு ஆயுத நாடாக மாறுவதே வட கொரியாவின் லட்சியம் என அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.
மிகவும் சக்திவாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஹுவாசாங் ஏவுகணை சோதனையை அண்மையில் வெற்றிகரமாக நிகழ்த்திய ராணுவ அதிகாரிகளுக்கு அவர் பதவி உயர்வு வழங்கினார்.
அமெரிக்காவின் அணு ஆயுத அச்சுறுத்தலை முறியடிக்கும் வகையில் அணு ஆயுதங்களை மேம்படுத்துமாறு விஞ்ஞானிகளுக்கும், ராணுவ அதிகாரிகளுக்கும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.