காய்ச்சல், இருமல், தொண்டை வலி, சுவை உணர்வு இல்லாதது, மூச்சுவிடுவதில் சிரமம் ஆகிய அறிகுறி உள்ளவர்களுக்கு மட்டுமே இனிமேல் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று பொதுசுகாதாரத்துறை புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.
மேலும், விமான பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும் ரேண்டம் சோதனை கைவிடப்படுவதோடு, மகப்பேறு, அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவோருக்கும், உள்நாட்டிற்குள்ளேயே பயணிப்போருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.