உக்ரைனில் அணு ஆயுதங்களை அகற்றிய ஏவுகணைகளை ரஷ்யா வீசுவதாக இங்கிலாந்து அரசு குற்றம் சாட்டியுள்ளது.
பழைய அணு ஆயுத ஏவுகணைகளில் இருந்து அணு ஆயுதங்களை அகற்றி, உக்ரைன் மக்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தலாம் என்று பிரிட்டனின் ராணுவ உளவுத்துறை எச்சரித்துள்ளது.
ரஷ்ய வீரர்களை இழந்த குடும்பங்களிடையே பேசிய அதிபர் புதின், தங்கள் இலக்கு விரைவில் அடையப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து இத்தகவல் வெளியாகியுள்ளது.