உக்ரைன் தலைநகர் கீவ் பிராந்தியத்தில் ரஷ்ய ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தை அதிபர் ஜெலன்ஸ்கி பார்வையிட்டார்.
நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் 9 மாதங்களாக நீடித்து வருகிறது.
இந்நிலையில், வைஷ்ஹோரோட்-ல் ரஷ்ய படைகள் அடுத்தடுத்து ஏவுகணை வீசி தாக்கியதில், 4 மாடி குடியிருப்பு கட்டிடம் பலத்த சேதமடைந்தது.
தொடர்ந்து, சேதமடைந்த கட்டிடங்களை நேரில் பார்வையிட்ட ஜெலன்ஸ்கி, அங்குள்ள படை வீரர்களிடம் நகரின் நிலைமை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்யும் நிவாரண மையம் சென்றார்.