மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரி எல்லை அருகே அகதிகளாக தஞ்சமடைய வந்த 600 பேரை செர்பிய எல்லைப் பாதுகாப்பு படையினர் மடக்கி பிடித்தனர்.
உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் பிற மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து தினந்தோறும் ஏராளமான அகதிகள் அடைக்கலம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்கின்றனர்.
இந்நிலையில், வடக்கு செர்பிய நகரமான ஹோர்கோஸில் வியாழன் இரவு நடந்த துப்பாக்கிச்சூட்டில், ஆயுதமேந்திய பலர் அடையாளம் காணப்பட்டனர்.
தொடர்ந்து, போலீசாரின் தேடுதல் வேட்டையில், ஹங்கேரி - செர்பியா எல்லை வழியே சட்டவிரோதமாக நுழைய முயன்ற அகதிகளை தடுத்து நிறுத்தி கைது செய்த செர்பிய போலீசார், அவர்களிடம் இருந்து ஆயுதங்களை கைப்பற்றினர்.