டிவிட்டரில் 3 புதிய வண்ணங்களில் வெரிஃபைட் (verified) குறியீடுகளை வெளியிட உள்ளதாக எலான்ஸ் மஸ்க் அறிவித்துள்ளார்.
இது குறித்து தெரிவித்த அவர், நிறுவனங்களுக்கு தங்க நிற குறியீடும், அரசுகளுக்கு சாம்பல் நிற குறியீடும், தனிநபர்களுக்கு நீல வண்ண குறியீடும் வழங்கப்படும் என கூறினார்.
இந்த புதிய முறை அடுத்த வாரம் வெள்ளிக்கிழமையன்று அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், கணக்குகள் முழுமையாக சரிபார்க்கப்பட்டு வெரிஃபைட் குறியீடு வழங்கப்படும் என்றும் எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.