மெரினா கடற்கரையில் தூங்கியவர்களை எழுப்பி ஓட ஓட விரட்டிச்சென்று கத்தியால் வெட்டி செல்போன், பணம் கொள்ளையடித்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மெரினாவில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகே, தெலங்கானாவைச் சேர்ந்த பீமாராவ், கொல்கத்தாவைச் சேர்ந்த சபீர் இருவரும் தூங்கிக்கொண்டிருந்தபோது, நள்ளிரவில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த நான்கு பேர், அவர்களை எழுப்பி மிரட்டி பணம் கேட்டுள்ளனர்.
பணம் இல்லையென கூறியதும் அவர்களை கத்தியால் வெட்டி செல்போன், 2 ஆயிரம் பணத்தை பறித்துக்கொண்டு தப்பி ஓடினர். தகவலறிந்த போலீஸார் காயமடைந்த 2 பேரையும் மருத்துவமனையில் சேர்த்து விட்டு, திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம் கால்வாய் பகுதியில் இருந்த 4 பேரையும் கைது செய்தனர்.