அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டே ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா உருவாக்கப்பட்டதாகவும், ஆளுநரின் கடிதத்திற்கு 24 மணி நேரத்திற்குள் பதிலளிக்கப்பட்டதாகவும், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் பேட்டியளித்த அவர், அனைத்து வகை கூறுகளை ஆராய்ந்தும், சர்வதேச அளவில் விவரங்களை ஆய்வு செய்தும், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா கொண்டுவரப்பட்டதாக கூறினார்.
மேலும், ஆன்லைன் விளையாட்டுகள் அனைத்து தடை செய்யப்படவில்லை என்றும், சூதாட்டங்களுக்கு மட்டுமே தடை கொண்டு வரப்படுவதாகவும் அமைச்சர் விளக்கமளித்தார்.