டொயட்டோ நிறுவனம் தனது இன்னோவா ஹைகிராஸ் டீசல் கார்களுக்கான முன்பதிவை தொடங்கியுள்ள நிலையில் வரும் ஜனவரி மாதம் விற்பனைக்கு வருமென தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 மாறுபட்ட வகைகளில் உருவாக்கப்பட்டுள்ள காரில் 6 ஏர் பேக்ஸ் மற்றும் 8 பேர் அமரும் இருக்கை, அனைவருக்கும் சீட் பெல்ட், காலநிலை கட்டுப்பாடு, சன்ரூஃப் உள்ளிட்ட வசதிகளையும் உள்ளடக்கியுள்ளது.
டிரைவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் அடாஸ் தொழில்நுட்பம் (ADAS), மோனோகோக் சேஸ்சுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த கார் லிட்டருக்கு 21 கிலோ மீட்டர் மைலேஜ் கொடுப்பதோடு, வாகனத்தை இயக்கிய 9 புள்ளி 5 வினாடிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும் என்று டொயோட்டா கூறியுள்ளது.
காரின் விலை 22 லட்சத்திலிருந்து 28 லட்சம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.