கடந்த கால வரலாறுகளை திருத்தி எழுதும் வரலாற்றுஆய்வாளர்களுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என்று உள்துறைஅமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
அஸ்ஸாமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், நமது வரலாறு சரியாக எழுதப்படவில்லை என்பதை பல்வேறு சந்தர்ப்பங்களில் தாம் கேட்டறிந்ததாகவும், வரலாற்றை திருத்த வேண்டிய வேளை வந்துவிட்டது எனவும் குறிப்பிட்டார்.
இந்தியாவை 150 ஆண்டுகளாக ஆண்ட 30 மொகாலய மன்னர்கள்,ஆங்கிலேயர்கள் மற்றும் சுதந்திரத்திற்காகப் போராடிய 300 தியாகிகள், வீரர்கள் பற்றிய வரலாறுகளை திருத்தி எழுதும்படி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு அமித் ஷா கோரிக்கை விடுத்தார்.