நிலவின் பின் இருந்து பூமி உதயமாகும் காட்சியை ஓரியன் விண்கலம் பதிவு செய்துள்ளது.
கடந்த 16-ஆம் தேதி, ஆர்டிமிஸ் 1 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட ஓரியன் விண்கலம், கடந்த 21-ம் தேதி பதிவு செய்த வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில் விண்வெளியின் இருள் சூழ்ந்த பகுதியில், நிலவின் பின்னிருந்து பூமி மெல்ல உயர்ந்து வரும் காட்சி பதிவாகியுள்ளது. இக்காட்சியை தற்போது நாசா வெளியிட்டுள்ளது.