சென்னை கே.கே.நகரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில், 10ஆம் வகுப்பு மாணவருக்கு சக மாணவர்கள் பாலியல் ரீதியாக ராகிங் கொடுமை செய்த புகார் குறித்து, வடபழனி சரக உதவி ஆணையர் பாலமுருகன் பள்ளியில் விசாரணை மேற்கொண்டார்.
புதுச்சேரியிலிருந்து மாறுதலாகி கடந்த ஆகஸ்ட் மாதம் இப்பள்ளியில் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவன், கடந்த சில நாட்களாக பள்ளிக்கு செல்ல மறுத்துள்ளார்.
இதுகுறித்து மாணவனின் தந்தை விசாரித்த போது, சில மாணவர்கள் 10 ஆம் வகுப்பு மாணவரை ஏற்றுக் கொள்ளாமல் தொல்லை அளித்து ராகிங் கொடுமை செய்தது தெரிய வந்தது.
12 மாணவர்கள் மீது பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், ராகிங் கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.