சாலையோரத்தில் சுற்றி திரியும் விலங்குகள் விபத்து அல்லது நோயால் பாதிக்கப்பட்டால் அவற்றிற்கு உரிய சிகிச்சை அளித்து மருத்துவ உதவி வழங்குவதற்காக மொபைல் ஹாஸ்பிடல் வாகனம் சென்னையில் இன்று துவக்கி வைக்கப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ப்ளூ கிராஸ் அமைப்பின் பொதுமேலாளர் வினோத்குமார், அவசர சிகிச்சை அளிப்பதற்கான ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், முதலுதவிக்கான மருந்துகளோடு கால்நடை மருத்துவரும் செல்வதால் விலங்குகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க முடியும் எனக் கூறினார்.
ப்ளூ கிராஸின் இணையதளத்தில் அடிபட்ட விலங்குகள் பற்றி தகவல் தெரிவிப்பவரின் பெயர், தொலைபேசி எண், இடம் ஆகியவற்றை பதிவு செய்தால் உடனடியாக மொபைல் ஹாஸ்பிடல் வாகனம் அந்த இடத்திற்கு செல்லும் எனக் கூறினார்.
மேலும், பருவமழை காலத்தில் சாலையோரத்தில் இருக்கும் விலங்குகளை மீட்டு உணவளித்து தங்க வைக்க ப்ளூ கிராஸ் அமைப்பு தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.