ஆப்கானிஸ்தானில், பொதுமக்கள் தொழுகை நடத்த ஏதுவாக, நூற்றுக்கணக்கான காலி கட்டடங்களும், கடைகளும் மசூதிகளாக மாற்றப்பட்டுள்ளன.
ஒரே சமயத்தில், அனைவரையும் தொழுகைக்கு வரவழைக்க, தலைநகர் காபூல் முழுவதும் 400 ஒலிப்பெருக்கிகள் நிறுவப்பட்டுள்ளன.
மேலும், வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகையின் போது கடைகளை அடைக்குமாறு அந்நாட்டின் நல்லொழுக்கத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.