நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து உடனடியாக வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.
போர்ச்சுக்கலைச் சேர்ந்த ரொனால்டோ, கடந்த ஆண்டில் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் விளையாட ஒப்பந்தமானார். அண்மையில், அணி நிர்வாகத்தின் செயல்பாடுகளை விமர்சித்திருந்த ரொனால்டோ, தலைமை பயிற்சியாளர் எரிக் மீது தனக்கு எந்தவித மரியாதையும் இல்லை என கூறியிருந்தார்.
இந்நிலையில், மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து விலகுவதாக அறிவித்த ரொனால்டோ, பரஸ்பர ஒப்புதலின் அடிப்படையில் ஒப்பந்தத்தை முடித்துக்கொள்ள முடிவெடுத்ததாகவும் தெரிவித்தார்.